World's people must learn to live together without Racism. See the Crows.
மனித குலம் ஒற்றுமையுடன் வாழக்கற்றுக் கொள்ளவேண்டும்.
World’s people must learn to live together without Racism, religious mania, and to live with human morality. See the crow’s how they are calling their brethrens and sharing their food.
உலக மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். இன வெறி, மத வெறி,சாதி வெறியை மறந்து மனித நெறியுடன் வாழ வேண்டும். இருப்பவர் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும். பகுத்தறிவு படைத்த மனிதர்கள் மனித நேய உணர்வை வளர்க்கவேண்டும். தான் வாழ்ந்தால் போதும் தான் சாப்பிட்டால் போதும்,அடுத்தவர் எப்படியாவது அல்லாடட்டும் என்று நினைக்கும் மனிதர்கள் காக்கை,குருவிகளைப் பாருங்கள், தங்கள் இனத்தாரை அழைத்து, அயலாரை அன்புடன் அரவணைத்து, பட்சமாய் இருந்து, தங்களுக்கு கிடைக்கும் உணவை பகிர்ந்துண்டு சாப்பிடுகின்றன.
மனிதன் பேராசை என்னும் தீய குணத்தில் மூழ்கி, அடுத்தவர் சொத்தை அபகரித்து தன் குடும்பம் மட்டும் வாழ எண்ணுகிறான். காக்கை தன் இனத்தாருடன் உணவை பகிர்ந்துண்டு சாப்பிடும் அழகை பார்த்தாவது அவன் திருந்துவானா என்று தெரியவில்லை. காக்கை தன் கூட்டத்தாரை அன்புடன் அழைப்பதைக் கேளுங்கள்.

No comments:
Post a Comment