Happy Christmas. Cross Politics.
ஏசுபிரான் பிறந்த தின நல்வாழ்த்துக்கள்
ஏசுபிரானே நீங்கள் உலக மக்களை
பசி,பஞ்சம், நோய் போன்றவைகளிலிருந்து
விடுபட்டு நல்வாழ்வு வாழ வழி காட்டும்
ஒளிவிளக்காக இவ்வுலகில் அவதரித்தீர்
பாமர மக்கள் தாங்கள் அறியாமல் செய்த
பாவங்களை உங்களிடம் சொல்லி
நற்கதி அடைய உங்களை நாடி வருகிறார்கள்
அவர்கள் அறியாமல் செய்த பாவங்களைப்போக்கி
மீண்டும் அவர்கள் நல்வழியில் நடக்க ஆசீர்வதிக்கிறீர்
ஆனால் பாவ மூட்டைகளை கணக்கில்லாமல்
குவித்து வைத்திருக்கும் ஒரு சில அரசியல்வாதிகளோ
உங்கள் பெயரைச்சொல்லியே தங்கள் பாவ மூட்டைகளை
மீண்டும் குவிக்க எண்ணுகிறார்கள்
மக்களை ஏமாற்றும் அந்த மாபாவிகளுக்கு
நீங்களும் பாவ மன்னிப்பு அளித்தால்
கொடியவர்கள் உங்களை அறைந்த சிலுவையையே
சின்னமாக வைத்து ஊரை ஏமாற்றி
ஏசுபிரானுக்கு பதிலாக நாங்களே பாவமன்னிப்பு
அளிக்கும் உரிமையை வாங்கிவிட்டோம்
என்று வாய் கூசாமல் பொய் சொல்லி
எங்களுக்கு ஓட்டு போட்டால்
நீங்கள் எத்தகைய பாவங்கள் செய்தாலும்
மன்னித்து விடுவோம் என்று முழக்கமிடுவார்கள்
என்னைப்போன்ற பாமரனின் வேண்டுகோள்
ஏசுபிரானே.......அறியாமல் பாவம் செய்தவர்களை
மன்னியுங்கள்
ஆனால் பதவியை வைத்து கோடிகளை குவிக்க எண்ணும்
அரசியல் குள்ள நரிகளை மன்னிக்காதீர்
ஏசுபிரான் பிறந்த நாளில்
வறியவர்களுக்கும்,நோயினால் வாடுபவர்களுக்கும்
நம்மால் இயன்ற உதவிகளைச்செய்வோம்
அனைவருக்கும் ஏசுபிரான் பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.
எஸ்.வி.ரமணி.
No comments:
Post a Comment